தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-05-2017 அன்று கொள்ளிடம் ஆற்றில் முற்றுகை போராட்டம் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற நாகை மாவட்ட தமிழக காவிரி விவசாயிகள் கூட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி வருகின்ற 16-05-2017 அன்று  பத்தாயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் இணைந்து கொள்ளிடம் ஆற்றில்  முற்றுகையிட்டு நாள் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டு  இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருவதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் உப்பு நீர் உள்புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது அதனால் அந்த நீரை விவசாயத்திற்கோ குடிநீராகவோ பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே கொள்ளிடம் ஆற்றுக்கு குறுக்கே தடுப்பணைகள் அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.

கடந்த 2014ஆம் ஆண்டே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கான திட்டத்தை அப்பொதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார் ஆனாலும் இன்று வரை அங்கே தடுப்பணை கட்டப்பட வில்லை.விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலமுறை இது தொடர்பாக கோரிக்கைகள் அனுப்பியும் பலனளிக்கவில்லை அதனால் கொள்ளிடம் ஆற்றில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தற்பொழுது அறிவித்துள்ளனர்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...