தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17-04-2017 மியன்மரில் புயல் கரையை கடந்தது -இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர்ந்தே காணப்படும்.

17-04-2017 இன்று அதிகாலை மியான்மரில் புயல் கரையை கடந்தது புயல் கரையை கடந்தாலும் இன்றும் காரைக்கால் ,நாகப்பட்டினம் ,புதுச்சேரி ,கடலூர் ,சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் வெப்பம் உயர்ந்தே காணப்படும்.

18-04-2017 நாளை காரைக்கால் ,நாகப்பட்டினம் ,புதுச்சேரி ,கடலூர் ,சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று நிலவிய வெப்பநிலையை விட 1° முதல் 2° செல்ஸியஸ் குறைந்தே காணப்படும் .அதைப்போன்று 19-04-2017 அன்று அதற்கு முதல் நாளான 18-04-2017 அன்று நிலவ இருக்கும் வெப்பநிலையை விட 1° முதல் 2° செல்ஸியஸ் குறைந்தே பதிவாக வாய்ப்புள்ளது.21-04-2017க்கு பிறகு வடகடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது மீண்டும் உயர வாய்ப்புகள் உள்ளது.

17-04-2017 நாளை மாலைக்கு பிறகு கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மேற்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உண்டு.20-04-2017,21-04-2017 ஆகிய தேதிகளில் தமிழக உள் மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு மழையை எதிர்பார்க்கலாம்.

காரைக்கால்,நாகப்பட்டினம்,கடலூர்,புதுச்சேரி உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...