தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17-04-2017 இன்று காரைக்காலில் 99° நாகப்பட்டினத்தில் 103.5° வெப்பம் பதிவானது

17-04-2017 இன்று காரைக்காலில் 98.96° ஃபாரன்ஹீட்டும் நாகப்பட்டினத்தில் 103.46° ஃபாரன்ஹீட் அளவும் வெப்பம் பதிவானது.


17-04-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காற்றின்வேகம் அதிகரித்துள்ளது.மியான்மரில் புயல் கரையை கடக்கும் பொழுது தமிழக வட கடலோர மாவட்டங்களில் காற்றில் இருந்த ஈரம் உறிஞ்சப்பட்டதால் தற்பொழுது காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் அனல் காற்று வீசிவருகிறது.இன்று காலை 9:30 மணிக்கு பதிவான அளவின் படி காரைக்காலில் வெப்பக்காற்றின் வேகம் 8 க்நாட்(knot ) என்ற அளவில் இருந்தது நேற்றுடன் ஒப்பிடுகையில் இது சற்று  அதிகம் தான்.இதைப்போன்ற மேரேம்களில் பகல் வேளையில் காற்றின் வேகம் அதிகரித்தால் அது அனல் காற்றுக்கு வழிவகுக்கும்.

1 க்நாட்(knot ) என்பது மணிக்கு 1.852 கி.மீ வேகத்தை குறிக்கிறது அப்படியானால் காரைக்காலில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வெப்பக்காற்று வீசியிருக்கிறது.

17-04-2017 100°  ஃபாரன்ஹீட்டும்  அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மாவட்டங்கள்.

வேலூர் ------------------------> 110.3°
சென்னை (புறநகர் )------------------------>107.96°
திருச்சி ------------------------>107.24°
மதுரை ------------------------>106.52°
பரங்கிப்பேட்டை ------------------------>105.8°
திருப்பத்தூர் ------------------------>105.8°
கரூர் ------------------------>105.4°
தர்மபுரி ------------------------>105.08°
நாகப்பட்டினம் ------------------------>103.46°
புதுச்சேரி ------------------------>103.28°
சென்னை (நுங்கம்பாக்கம் )------------------------>102.02°
கடலூர் ------------------------>101.84°
தொண்டி ------------------------>100.4°

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...