தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

18-04-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளைய வானிலை எப்படி இருக்கும் ?

18-04-2017 தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் அனல் காற்று அதிகமாக வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.உண்மை தான் நாளை காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது 17-04-2017 இன்றே காரைக்கால் மாவட்டத்தில் காற்றின் வேகம் சற்று அதிகரித்தே இருந்தது அதனால் அனல் காற்றும் அதிகமாகவே இருந்தது.இதற்கு முந்தய பதிவில் அதை தெளிவாக விளக்கியுள்ளேன்அதனை படிக்க - https://goo.gl/MZlwFc

வானிலை ஆய்வு மையத்தின் இந்த அனல் காற்று செய்தி வெளியாகியவுடன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தேவையில்லாத வதந்திகள் எல்லாம் பரப்பப்பட்டு வருகின்றன.உண்மையில் அனல் காற்று அதிகரிப்பது என்றால் என்ன ? உதாரணத்துக்கு 17-04-2017 இன்று காலை 9:00 மணிக்கு காரைக்காலில் காற்றின் வேகம் மணிக்கு 14 கி.மீ ஆக இருந்தது என்று வைத்துக் கொல்வோம் நாளை 18-04-2017 அன்று காலை 9:00 மணிக்கு அது திட்டத்திட்ட மணிக்கு 19 கி.மீ என்று உயர வாய்ப்பு உள்ளது அதே போல நன்பகல் 12:00 மணியளவில் 17-04-2017 இன்று காற்றின் வேகம் 11 கி.மீ ஆக இருந்தது என்று வைத்துக்கொள்வோம் நாளை 18-07-2014 அன்று அது 17 கி.மீ ஆக உயர வாய்ப்பு உள்ளது.

மியான்மரில் கரையை கடந்த புயலால் தமிழக பகுதிகளில் உள்ள காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டுவிட்டது அதனால் காற்றின் வேகம் அதிகரிக்கும் பொழுது அது அனல் காற்றாக நம்மால் உணரப்படுகிறது.அவ்வளவு தான் விஷயம்.மற்றபடி இதனால் அதிகபட்ச வெப்பநிலையெல்லாம் 50° செல்ஸியஸ் அளவு உயரப்போகிறது என்று அர்த்தமில்லை.மாறாக நாளை காரைக்காலில் இன்று பதிவான வெப்பநிலையை விட 1° முதல் 2° செல்ஸியஸ் குறைந்தே பதிவாகும் ஆனால் அனல் காற்று வீசக்கூடும் அவ்வளவு தான்.முடிந்த வரையில் அனல் காற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது நல்லது.

வீட்டில் இருக்கும் நம்மை சாகடிக்கும் அளவுக்கு எல்லாம் அதிக வெப்பம் அடுத்த மூன்று நாளைக்குள் உயரப்போவது கிடையாது.அதனால் வீண் வதந்திகளை எண்ணி வருந்துவதை விடுத்து நாளை 11:00 மணியிலிருந்து மாலை 4:00 வரை காட்டாயம் வெளிய நடமாட வேண்டிய அவசியம் உள்ளவர்கள் அனல்காற்றை சமாளிக்கும் அளவிற்கு ஆயுத்தமாக செல்லுங்கள்.நிறைய நீர் அருந்துங்கள்,குளிர்ச்சியான பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...