தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணகி கோயில் சித்திரை திருவிழா

சேரன் செங்குட்டுவனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது தான் கண்ணகி திருக்கோயில்.இது தற்பொழுது கேரள - தமிழக எல்லை பகுதியில் அமைந்திருக்கும் வண்ணாத்தி பாறையில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம்  முழு நிலவு (பௌர்ணமி) நாளன்று மங்கலதேவி என்ற கண்ணகிக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சித்திராப் பௌர்ணமி அன்று மட்டுமே இங்கே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள எல்லைப் பிரச்சனையால் இக்கோயில் பராமரிப்பின்றி உள்ளது.2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் இன்னும் சில வருடங்களில் முற்றிலும் சிதிலமடைந்து விடுமோ என்ற அச்சம் அதை ஒட்டியுள்ள தமிழக பகுதி மக்களின் மனதில் ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது கேரள மாநில எல்லையில் இருந்து சுமார் 40அடி  தூரம் தள்ளி அமைந்திருந்த இக்கோவிலை  புனரமைக்க 1976ஆம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது பிறகு  இந்த கோயிலுக்கு அருகே கேரள அரசு ஒரு சாலையை  அமைத்தது அதன் பின் தமிழக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இப்பொழுது அந்த சாலையை சான்றாக வைத்துக்கொண்டு கண்ணகி கோயில் கேரளாவுக்கே சொந்தம் என்று கேரள அரசு உரிமை கொண்டாடி வருகிறது.உரிமை கொண்டாடும் கேரள அரசும் இக்கோவிலை பாதுகாத்து பராமரிப்பதாக தெரியவில்லை.சில ஆண்டுகளுக்கு முன் இங்கு இருந்த 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணகி சிலையும் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

செய்தி : இந்த ஆண்டு 2017 சித்திரை முழு நிலவு திருவிழாவை கண்ணகி கோவிலில் எப்படி நடத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் இன்று நடைபெற்று வருகிறது இதில் தேனி மற்றும் கேரள மாநில இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் ,வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...