தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2017ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில்(RTI) மாற்றம் தேவைதானா ?

அரசு நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கு தேவையான தகவல்களை பொதுமக்களே அறிந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் தகவல் பெறும் சட்டமான ஆர்.டி.ஐ.2005ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில்  கடந்த 2012ஆம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டது.ஆனால் சமீப காலமாக இந்த சட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் தேவையென கோரிக்கைகள் எழுந்து வந்தன.இதனையடுத்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.அதற்கான வரைவு அறிக்கை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் மீதான கருத்துக்களை பொதுமக்கள் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்று கூறியவர்கள் கூட இந்த வரைவு அறிக்கையை பார்த்து விட்டு இதெல்லாம் தேவைதானா என கேட்க்கும் அளவில் உள்ளது அதில் இருக்கும் சில மாற்றங்கள்.ஆம் அதில் ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்ப மனு அளித்த நபர் இறந்துவிட்டால் அந்த மனு குறித்து ஆய்வு மேற்க்கொள்ள தேவையில்லையாம்.சும்மாவே பொதுமக்கள் நலனுக்காக ஆர்.டி.ஐ பதிவு செய்த நல்ல உள்ளம் கொண்டவர்களை அதிகாரத்தில் உள்ளவர்களும் சமூக விரோதிகளும் துரத்தி துரத்தி அடிக்கிறார்கள் அதில் இந்த சட்டத் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டால் அவ்வளவு தான்.நான் விளையாட்டாக சொல்லவில்லை உறவுகளே இந்த விஷயம் உண்மைதான் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பொதுநலுனுக்காக ஆர்.டி.ஐ விண்ணப்பித்த பல நபர்கள் உயிரிழந்து உள்ளனர் அவர்களில் சிலரது மரணங்களில் இன்று வரை மர்மம் நிலவி வருகிறது.மேலும் தகவலை தர மறுத்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் அபராதமும் விதிக்கப் படாது என்பது போல ஒரு சில திருத்தங்கள் இதில் இடம் பெற்றுள்ளன மேலும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப் படும் மனுவில் 500 வார்த்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாதாம் இதைப்போன்ற விஷயங்கள் எல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டமான RTIயை மக்களுக்கு பயனில்லாமல் வெறும் பேரளவில் மட்டுமே இருக்கச் செய்வதற்கான யுக்திகள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


நான் இந்த பதிவில் கூறியது மக்களை பாதிக்கும் ஒரு சில விஷயங்களைப் பற்றி மட்டுமேதான்.இன்னும் கட்டண உயர்வு போன்ற பல மாற்றங்கள் இந்த வரைவு அறிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது அதை முழுவதுமாக நீங்கள் தெரிந்துக் கொள்ள அந்த அறிக்கையை இங்கு இணைக்கிறேன் http://document.ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02rti/1_5_2016-IR-31032017.pdfhttp://document.ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02rti/1_5_2016-IR-31032017.pdf

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...