தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

21-04-2017 தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை திருவிழா

தஞ்சாவூர் பெரியகோவில் இதை தஞ்சை பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும் பொதுவாக வழங்குவர்.கிபி 11ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் சர்வேதேச அளவில் புகழ் பெற்றது.


தஞ்சை பெரியகோயிலுக்கு கிடைக்கப்பெற்ற சர்வேதேச அங்கீகாரங்கள்

1987 ஆம் ஆண்டு இது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி,அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக தஞ்சை பெரியகோயில் அறிவிக்கப்பட்டது.சர்வேதேச அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் அறிவிக்கப்பட்ட பொது ஊழி உலகக் களப்பட்டியலில் தஞ்சை பெரிய கோயில் இடம்பெற்றுள்ளது அழியாத சோழர் கோயில்கள் என்ற பெயரில் இதனுடன் சேர்ந்து ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைக் கொண்ட சோழபுரம் கோவிலும் இடம்பெற்று இருப்பது கூடுதல் செய்தி.

உலக அதிசியங்களில் ஒன்றாக தஞ்சை பெரிய கோயிலை அறிவிக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் பல காலமாக குரல் எழுப்பி வருகின்றனர்.

இக்கோயில் விமானத்தின் உயரம் 216 அடி சுமார் 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மலைகள் இல்லாத பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்ட கோயிலை கட்ட கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது இன்னுமும் புரியாத புதிராக உள்ளது.1000 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு கோயிலைக் கட்டி முடிக்க எப்படி முடிந்தது என்று உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும்  வரலாற்று ஆய்வாளர்கள் தஞ்சைக்கு வந்து இக்கோயிலை ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

செய்தி : வருகின்ற 21-04-2017 அன்று தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.18 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த திருவிழாவானது 08-05-2017 அன்று கொடியிறக்கப்பட்டு நிறைவு பெறுகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...