தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

23-04-2017 இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 99° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவானது

23-04-2017 இன்று புதுச்சேரியில் 37.2° செல்ஸியஸ் அதாவது 98.96° ஃபாரன்ஹீட்வெப்பம் பதிவானது அதேபோல காரைக்காலில் இன்று 37° செல்ஸியஸ் அதாவது 98.6° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

23-04-2017 இன்று நாகப்பட்டினத்தில் 100.4° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

23-04-2017 இன்று தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் 44.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதாவது 111.38° ஃபாரன்ஹீட்.தமிழகத்தில் இந்த ஆண்டு 2017லில் பதிவாண அதிகபட்ச வெப்பநிலை அளவில் இதுவே அதிகம்.


23-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்.

வேலூர் ----------------------------->111.38° ஃபாரன்ஹீட்(44.1° செல்ஸியஸ் )
மதுரை ----------------------------->106.16°
பாளையம்கோட்டை ----------------------------->106.16°
திருச்சி-----------------------------> 105.98°
சென்னை (புறநகர் ) ----------------------------->102.38°
சேலம் ----------------------------->102.38°
தர்மபுரி ----------------------------->100.76°
நாகப்பட்டினம் ----------------------------->100.4°
பரங்கிப்பேட்டை ----------------------------->100.4°


தமிழகத்தில் இதே வானிலையே தொடருமானால் வருகின்ற 25-04-2017 மற்றும் 26-04-2017 ஆகிய தேதிகளில் வட கடலோர பகுதிகளில் இருந்து 60 முதல் 100 கி.மீ வரை உள்ள பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட அதாவது அதற்கு முந்தைய சில நாட்களில் பதிவான வெப்பநிலையை விட 2° முதல் 3° வரை உயர வாய்ப்புள்ளது.குறிப்பாக வேலூர் மாவட்டத்திலும்  அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடுமையான வெப்பம் நிலவ வாய்ப்புகள் உள்ளது.

25-04-2017 மற்றும் 26-04-2017 ஆகிய  தேதிகளில் கும்பகோணம் ,தஞ்சாவூர் ,காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை,வேலூர்,அரக்கோணம் ,பெரம்பலூர் ஆகிய பகுதிகளிலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

25-04-2017 அன்று  புதுச்சேரி ,கடலூர் ,காரைக்கால் ,நாகப்பட்டினம் ,சென்னை உள்ளிட்ட வட கடலோர பகுதிகளிலும் வெப்ப உயர்வு இருக்கும் தோராயமாக 1° முதல் 2° செல்ஸியஸ் வரை வெப்பம் உயர்ந்து காணப்படலாம்.

வானிலை குறித்து மேலும் தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...