தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் விவசாயக்கடன் தள்ளுபடிக்கு அனுமதி வழங்காத ஆளுநர் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி காட்டிய 32 விவசாயிகள் கைது

புதுச்சேரியில் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நகரம் மற்றும் ஊரக பகுதிகளுக்கு சென்று அங்குள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள்  மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிடுவது வழக்கம் அந்த வகையில் இன்று பத்துக்கண்ணு அருகே காட்டேரிக்குப்பம் கிராமத்ஹில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வழிபட்டப் பின் அங்கிருந்த குலத்தை பார்வையிட்டார்.பின்னர் அவர் அங்கிருந்து கிளம்புகையில் புதுச்சேரி மாநிலத்தின்  வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாயக்கடன் ₹22 கோடியை தள்ளுபடி செய்யும் கோப்புக்கு அனுமதி வழங்காத ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 32 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகளின் இந்த திடீர் கறுப்புக்கொடி போராட்டத்தால் அப்புகைதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...