தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி

கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 6 காரைக்கால் மீனவர்கள் இதுவரையில் கரைக்கு திரும்ப வில்லை.இதனையடுத்து அந்த 6 மீனவர்களின் குடும்பத்தினர் இது தொடர்பாக விசாரிக்க தொடங்கினர் அப்பொழுது அவர்கள் 6 பேரையும் போதை பொருட்கள் வைத்து இருந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து உள்ளதாக ராமேஸ்வரம் மீன்வளத்துறை மூலம் தெரியவந்தது இதனையடுத்து காரைக்கால்  மீனவ பஞ்சாயத்தார் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இன்று  கேட்டுக்கொண்டனர்.இச்சம்பவத்தை அடுத்து 6 காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து இலங்கை தூதரக அதிகாரியுடன் முதல்வர் நாராயணசாமி பேசினார்.மேலும் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என செய்தியாளர்களிடம் உறுதிபட தெரிவித்துள்ளார் .

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் இது போன்ற அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை.மேலும் காரைக்கால் மீனவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களை அடுத்து நடத்தப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இதை செய்துள்ளனர்.போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டுள்ளனர் என கூறினார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...