தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புனித வெள்ளி குறித்த சில தகவல்கள் - காரைக்காலில் நடைபெற்ற தவக்கால நிகழ்வுகள்

உலகெங்கிலும் உள்ள கிருஸ்துவர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா தான் ஈஸ்டர்.இயேசு உயிர்த்தெழுந்த நாளைத் தான் ஈஸ்டர் பண்டிகையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.பொதுவாக இந்த ஈஸ்டர் பண்டிகையானது  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம்  22 தேதியில் இருந்து ஏப்ரல் மாதம்  25ஆம் தேதிக்குள் கொண்டாடப்பட்டு  வருகிறது.இயேசு உயிர் தெழுந்த நாளான ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையைத் தான் புனித வெள்ளி என்கிறார்கள் இதை பெரிய வெள்ளி என்றும் ஆண்டவருடைய திருப்பாடுகள் வெள்ளி என்றும் கூட சிலர் வழங்குவர்.

இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் கிறிஸ்துவர்களின் நம்பிக்கையின் படி கிபி 27 - 33 இல் இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்ந்துழுந்த நிகழ்வைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.இயேசு பல்வேறு துன்பங்களை அனுபவித்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்த நாளைத் தான் புனிதவெள்ளி என்று அழைக்கிறார்கள்.இயேசு கிறிஸ்து இந்த நாளில் மரணமடைந்து அந்த வெள்ளிக் கிழமையை புனிதமடைய செய்ததால் அது புனிதவெள்ளி என்று வழங்கப்படுகிறது.

 அதன்படி இந்த ஆண்டு 14-04-2017 புனிதவெள்ளி திருநாள் கிருஸ்துவர்களால் அனுசரிக்கப்பட்டு  வருகிறது.மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் கிருஸ்துவர்களின் தவக்கால நிகழ்வாக 13-04-2017 (நேற்று) அன்று மாலை பெரிய வியாழன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இயேசு சிலுவையில் அறையப்படும் முன்பாக தனது சீடர்களின் பாதங்களை கழுவி புனிதப்படுத்தியதை நினைவு கூறும் வகையில் பங்கு தந்தை இறைமக்கள் 12 பேர் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்வு நடைபெற்றது.

14-04-2017 இன்று காலை இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று மாலை மரித்த இயேசுவின் உடல் சிலை வடிவில் மக்களின் காட்சிக்கு வைக்கப்படும்.இறைமக்கள் யாவரும் மரிக்கொழுந்துகளை இறந்த இயேசுவின் திரு உருவ சிலைக்கு சாற்றி பாதங்களை முத்தமிட்டு வணங்கி தங்களின் பாவங்களுக்காக இயேசு அடைந்த துன்பங்களை நினைவுக்கூருவர்.

15-04-2017 நாளை இரவு ஆராதனைக்கு பிறகு 16-04-2017 அன்று இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும்.

14-04-2017 இன்று புனிதவெள்ளிக் கிழமை காரைக்காலில் நடைபெற்ற சிலுவை பாதை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...