தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் மே 1 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.

புதுச்சேரியில் விபத்துக்களால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என முதல்வர் நாராயணசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டது.அன்று அவர் செய்தியாளர்களிடம்தெரிவித்தது என்னவென்றால் புதுச்சேரியில் பன்னிரண்டரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர் ஒன்பதரை லட்சம் வாகனங்கள் உள்ளன அவற்றில் அதிகமானது இருசக்கர வாகனங்கள் கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் புதுவை மாநிலத்தில் 710 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன அதில் 60 பேர்கள் தலையில் அடிபட்டு மரணமடைந்து உள்ளனர் இதற்கு காரணம் அவர்கள் ஹெல்மெட் அணியாதது தான்.ஒரு சிறிய மாநிலத்தில் இவ்வளவு விபத்துக்கள் நடப்பதினால் அதனை எப்படி குறைப்பது என்பது குறித்து கூட்டம் நடத்தப்பட்டது அதன் முடிவில் வருகின்ற 2017 ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது காட்டாயமாக்கப் பட்டுள்ளது என்று வர கூறினார் மேலும் அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில் இன்று இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள டிஜிபி சுனில்குமார் மே 1 முதல் ஹெல்மெட் அணியாமல் சாலைகளில் இருசக்கர வாகனம் ஓட்டிவருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்து உள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...