தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரிக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியை நான் தடுக்கவில்லை - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரியில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க மற்றும் பா.மா.க வை  தவிர அனைத்துக்கட்சி பிரநிதிகளும் கலந்துக் கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் டில்லிக்கு சென்று குடியரசு தலைவர்,பிரதமர் , உள் துறை அமைச்சர் ஆகியோரிடம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்து புகார் அளிக்க  முடிவு செய்யப்பட்டது.இதனையடுத்து இந்த நிகழ்வு குறித்து இன்று காலை முதல் கிரண்பேடி தனது முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் ஊழல் இல்லாத மற்றும் சுத்தமான புதுச்சேரி மாநிலத்தை உருவாக்க நான் முயற்சிசெய்து வருகிறேன் ஆனால் என்னை ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநராக இருக்க சொல்கிறார்கள் என்னால் அப்படி இருக்க முடியாது என்று கூறும் வகையில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி புதுச்சேரிக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியை நான் தடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார் மேலும் தான் அதிகாரிகளை ஆலோசித்து விதிமுறைகளின்படி தான் நிர்வாகம் செய்கிறேன் என்றும் எந்த கோப்புகளையும் நான் தேங்க விடவில்லை எனவும் தன்னிடம் வரும் கோப்புகளை உடனுக்குடன் சரி பார்த்து அனுப்பிவிடுவதாகவும் கூறியுள்ளார்.மேலும் இந்த விஷயத்தில் மக்களை திசை திருப்ப முதலமைச்சரும் சபாநாயகருக்கு முயற்சி மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...