தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தினந்தோறும் பெட்ரோல் ,டீசல் விலையில் மாற்றம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை - முதல்வர் நாராயணசாமி

தங்கம் உள்ளிட்ட கனிமங்களின் விலையைப் போல பெட்ரோலிய பொருட்களின் விலையையும் தினமும் மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.அதன்படி முதல் கட்டமாக புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து நகரங்களில் இத் திட்டத்தை செயல் மே 1ஆம் தேதி முதல் படுத்த ஆயுத்தமாக உள்ளது.இந்நிலையில் இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் தினமும் மாறும் ஆனால் பெட்ரோலிய பொருட்களின் விலையில் தினமும் மாற்றம் என்பது வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே பிரச்சனையை உருவாக்கும்.முதல் நாள் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகமாக இருந்தால் மறு நாள் குறைவாக இருக்கும் இதனால் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் செய்யும் விற்பனையாளர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.வாகன உரிமையாளர்களும் சிரமத்துக்கு உள்ளாவார்கள். பெட்ரோலியத் துறை சமையல் எரிவாயு விலையை உயர்த்தி உள்ளது கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் 3 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது ஆனால் அந்த லாபம் மக்களுக்கு சென்று சேரவில்லை.மக்களை ஏமாற்றும் வேலையை பெட்ரோலியத்துறை செய்து வருகிறது என்று அவர் கூறினார்.மேலும் அவர் இது தொடர்பாக பேசுகையில் புதுவையில் இத்திட்டத்தை செயல்படுத்தும் விவகாரம் குறித்து பெட்ரோலியத் துறையுடன் பேசுவேன் என்று கூறினார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...