தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மே அல்லது ஜூன் மாதத்தில் மீண்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இன்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் வாங்குவதையும் தடுக்க முடியவில்லை என்பதே இதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது . மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் யார் வெற்றி பெருவார்கள் என்பதை பொறுத்து தான் மூன்று அணிகளாக பிரிந்துக்கிடக்கும் அதிமுக என்ற கட்சியின் எதிர்காலமே உள்ளது.ஆகையால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்தில் உள்ள அணைத்து தரப்பு மக்களாலும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட இடைத்தேர்தல் மீண்டும் எப்பொழுது என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

குடியரசு தலைவருக்கான தேர்தல் வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் என தெரிகிறது அவ்வாறு அது நடைபெறவிருக்கும் பொழுது நாட்டின் எந்த தொகுதியும் சட்டமன்ற உறுப்பினர் இன்றி காலியாக இருக்கக்கூடாது என்பதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வில்லை.

அதற்குள்ளேயே அடுத்த தேர்தலுக்குள் எப்படியாவது ஆர்.கே.நகரில் குடியேறிவிட வேண்டும் என்று ஓட்டுக்கு பணம் வழங்குவதை கேலி செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் மெம்ஸ் வைரலாக பரவி வருகின்றது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...