தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை மே 1ஆம் தேதி முதல் தினமும் மாறும்

நாட்டில் தங்கம் விலையை  போன்று பெட்ரோலிய பொருட்களின்  விலையையும் தினமும் ஏற்றி இறக்க பொதுத்துறை நிறுவனங்கள் முடிவு எடுத்து இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.இந்தியன் ஆயில் ,இந்துஸ்தான் பெட்ரோலியம் ,பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் கரன்சி மதிப்பில் ஏற்படும் மாற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின்  மதிப்பில் ஏற்படுகின்ற மாற்றம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்து வருகின்றன.இந்நிலையில் புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து நகரங்களில் முதல் கட்டமாக பெட்ரோலிய பொருட்களின் விலையை தங்கம் உள்ளிட்ட கனிமங்களின் விலையை போல தினமும் மாற்றி அமைக்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக முடிவெடுக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் ஏற்படும்  பிரச்சனைகளை ஆராய்ந்து பின்னர் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி இனி மே 1ஆம் தேதி முதல் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தினமும் பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் செய்ய இருக்கும் இந்த தினசரி மாற்றங்கள் மக்களுக்கு வரமா ? சாபமா ? என்பது தான் இன்னும் சரியாக தெரியவில்லை.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...