தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பல்லாவரம்,குரோம்பேட்டை பகுதிகளில் பூனை பிரியாணி விற்பனை அமோகம்

சென்னை பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் சமீப காலமாக சாலைகளில் சுற்றித்திரியும் பூனைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.அதே சமயம் பல்லாவரம் காவல் நிலையத்தில் வீட்டில் ஆசையாக வளர்த்து வந்த பூனைக்குட்டிகளை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்ய முன்வருவோரின் எண்ணிக்கையும் சமீப காலமாக உயர்ந்து கொண்டே வருகிறது.இப்பகுதிகளில் எண்ணிக்கையில் அதிக அளவில் காணப்பட்டு வந்த பூனைகள் இப்பொழுது திடீரென குறைந்து வருவதற்கு காரணம் என்ன ? என்று  பல்வேறு பல மிருக நல ஆர்வலர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்த நிலையில் தான் வெளியாகியது அந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை செய்தி அது என்னவென்றால் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் பல்லாவரம் சந்தையில் பூனைக்கறி வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகின்றதாம் .இது குறித்த தகவலை Peoples for Animals (PFA) என்ற மிருக நல அமைப்பின் அதிகாரி சிரோனி பெரேரா ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் வெளிப்படையாகவே கூறி இருந்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் அளித்து இருந்த தகவலில் பல்லாவரத்தில்  கடந்த ஆண்டு இதே போல கூண்டுக்குள் அடைக்கப்பட்டு உடல் நலம் குன்றியிருந்த 16 பூனைகளை அப்பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து மீட்டோம் என்று கூறினார்.

நரிக்குறவர்களுக்கு பூனைக்கறி விருப்பமாகவும் அவர்களுள் மது அருந்தும் ஒரு சிலர் ரோட்டில் சுற்றித்திரியும் பூனைகளைப் பிடித்து சில இறைச்சிக் கடைக்காரர்களிடம் கொடுக்கிறார்கள் அவர்கள் அதனை சிறு துண்டுகளாக வெட்டி குறைந்த விலைக்கு சில சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.சில வியாபாரிகள் தங்களுடைய சாலையோரக் கடைகளில் பூனை பிரியாணி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வறுமையின் காரணமாக சிலர் இந்த பூனை பிரியாணியை விருப்பி உண்டு வருகின்றனர்.அதே சமயம் நகர வாழ்க்கையில் பரபரப்பாக இயங்கி வரும் சிலர் இதை பூனை பிரியாணி என்றே தெரியாமல் குறைந்த விலைக்கு பிரியாணி கிடைக்கிறதே என்று வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

பூனைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் அதிகமாக வசிக்கும் இடங்களில் வாழ பழகிக்கொண்டவை.மனிதர்கள் வேண்டாம் என்று தூக்கி எரியும்  கழிவுகளை பூனைகள் உணவாக உண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றன.மனிதர்கள் வாழும் சுற்றுசுழலை பாதுகாப்பதில் பூனைகளின் பங்கு இன்றியமையானது. இப்படி பூனைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டு இருக்கும் திடீர் மாற்றம் சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று என்ற தெளிவாக தெரிகிறது அதுசமயம் நாம் தொடர்ந்து சமூக வளர்ச்சிகள் குறித்து ஒவ்வொரு பதிவிலும் பேசிக்கொண்டு வருகிறோம் அதில் ஒரு பகுதியாக இன்றைய சமூக வளர்ச்சிக்கு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் அவசியம் தானா ? என்ற கேள்வியை அடிக்கடி விவாதங்களின் பொழுது முன்வைக்கிறோம்.ஆனால் இந்த இட ஒதிக்கீடு திட்டங்கள் இத்தனை ஆண்டுகளாக செயல்முறையில் இருந்தும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பலர் இப்படி பொருளாதாரத்திலும் ,கல்வியிலும்,அறிவிலும் பின் தங்கி இருப்பது வேதனையளிக்கிறது.எத்தனை முறை யோசித்தாலும் அரசு வழங்கும் இட ஒதிக்கீடுக்களுகான பலன்கள் உண்மையில் தேவை உள்ளவர்களை சென்றடைந்து இருக்கிறதா என்ற கேள்வியே இறுதியில் ஓங்கி நிற்கிறது.

இதோ PFA அமைப்பால் மீட்கப்பட்ட பூனைகள் தப்பித்து விட்டோமே என்று குதித்து ஓடும் காணொளிக்காட்சி உங்களுக்காகபகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...