தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

21-04-2017 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனல்காற்று வீசும்

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தற்பொழுது பகல் நேரங்களில் அனல் காற்று  வீசிவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நான் ஏற்கனவே கூறியது போன்று அனல்காற்று வீசுவதால் அதிகபட்ச வெப்பநிலையானது அதிகமாக பதிவாக வேண்டும் என்கின்ற கட்டாயம் கிடையாது.காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் 22-04-2017 மற்றும் 23-04-2017 ஆகிய தேதிகளில் வெப்பநிலை உயர வாய்ப்புகள் உள்ளது.உதாரணமாக 21-04-2017 அன்று நிலவ இருக்கும் வெப்பநிலையை விட 22-04-2017 அன்று 1° முதல் 2° செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது.


21-04-2017 மற்றும் 22-04-2017 ஆகிய தேதிகளில் மதியத்திற்கு பிறகு தமிழக உள்  மாவட்டங்களிலும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மேற்கு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.காரைக்கால்,நாகப்பட்டினம் ,கடலூர்,புதுச்சேரி உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு மிக மிக குறைவு தான்.

23-04-2017 அன்று தெண்கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு ஆனால் அதை இப்பொழுதே உறுதியாக கூறமுடியாது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...