தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் கடற்கரையில் குவியும் மதுப்பிரியர்கள் -பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து காரைக்கால் மாவட்டத்தில் இயங்கிவந்த 2 அரசு சார்பு நிறுவனங்களின் மதுக்கடைகள் உட்பட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இதுநாள் வரையில் இயங்கிவந்த 42 மதுக்கடைகள் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டன.காரைக்கால் நகரப்பகுதிகளைப் பொறுத்தவரையில் பாரதியார் ரோடு ,காமராஜர் சாலை,தேசிய  நெடுஞ்சாலை என ஒரு கிலோமீட்டருக்கு உள்ளாகவே அடுத்தடுத்த நேர் இணைச் சாலைகளாக அமையப்பெற்று இருப்பதாலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நிறைந்து காணப்படுவதாலும் மூடப்பட்ட மதுபானக் கடைகளுக்கான மாற்று இடங்கள்  தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இதனால் புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்டு இருக்கும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க மாநில நெடுஞ்சாலைகளை மாற்றி சில திருத்தங்கள் செய்து அரசாணைகள் வெளியிட சட்ட பூர்வமாக வாய்ப்புகள் உள்ளனவா என ஆலோசிக்கப்பட்டு வருவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்காலில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருந்த மதுக்கடைகள் மூடப்பட்டு  இருப்பதால் கடற்கரை சாலையில் உள்ள மதுக்கடையை நோக்கி மதுபிரியர்கள் படையெடுத்து வருகின்றனராம்.திடீரென அதிகரித்த கூட்டத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த மதுக்கடையில் பணியாற்றுபவர்களே திணறி வருகின்றனராம் அதுமட்டுமல்லாமல் மதுக்கடையின் உள்ளே அமர இடம் இல்லாததால் கடற்கரை சாலை முழுவதிலும் சாலையின் ஓரத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டு இருக்கும் நடைமேடைகளை பயன்படுத்தி மதுபிரியர்கள் மது அருந்தி வருகின்றனராம்.தற்பொழுது கோடைக் காலம் என்பதால் காரைக்காலைச் சார்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து மாலை நேரத்தை இனிதாக கடற்கரை காற்றுடன் செலவிடுவது வழக்கம்.ஆனால் கடந்த சில நாட்களாக மதுப்பிரியர்கள் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்தி வருவதால் கடற்கரைக்கு வரும் மகளிர் மற்றும் குழந்தைகள் தயக்கமின்றி எங்கும் செல்ல அஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி குடும்பத்துடன் கடற்கரைக்கு வருவோருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவிவருவதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காரைக்கால் கடற்கரையில் இதைப்போன்ற கோடைக்காலங்களில் காரைக்கால் மக்கள் மட்டுமின்றி காரைக்காலை சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களான நாகப்பட்டினம்,திருவாரூர்,கடலூர் போன்ற மாவட்டங்களிலும் இருந்து அதிக மக்கள் மாலை நேரத்தில் வருகை தருகின்றனர்.அது மட்டுமின்றி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கர்நாடகா,ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து திருநள்ளாறுக்கு வரும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு வந்து ஓய்வு எடுத்து செல்கின்றனர்.திடீரென காரைக்கால் கடற்கரையில் ஏற்பட்டு இருக்கும் இந்த மதுப் பிரியர்களின் படையெடுப்பால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு மக்கள் பயன்படுத்தும் நடைமேடைகளிலும் பொது இடங்களிலும் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்தாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்து உள்ளனர்.இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...