தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் அருகே நீரின்றி செத்து மடியும் அறிய வகை பழந்திண்ணி வௌவால்கள்

பறக்கும் சக்தியுடைய உயிரனங்களிலேயே பாலூட்டிகள்  என அடையாளம் காணப்பட்ட  ஒரே உயிரினம் வௌவால்கள் தான்.அந்த வௌவால் இனத்தில் 1000 க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் தற்பொழுது மிக அரிதானதாக கருதப்பட்டு வரும் உயிரினம் தான் இந்த பழந்திண்ணி வௌவால்கள்.

ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் ,உணவாகவும்  பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பழந்திண்ணி வௌவால்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை காரைக்கால் மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டு வந்தன.தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்த காரணத்தால் அந்த இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்கியது 1990களுக்கு பிறகு தொடங்கிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு இன்று காரைக்கால் மாவட்டத்தில் மிக அரிதாக காணப்படும் உயிரினங்கள் வரிசையில் இந்த பழந்திண்ணி வௌவால்களும் சேர்ந்துவிட்டன.

பழந்திண்ணி வௌவால்களின் சிறப்பு

இந்த பழந்திண்ணி வௌவால்கள் இரவு நேரங்களில் 40 முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் மரங்களில் இருக்கும் கொய்யா ,மாங்கனி போன்ற பழங்களில் உள்ள சாறினை மட்டும் உறிஞ்சி குடிக்கும் சக்கையை அப்படியே விட்டுச்செல்லும் ஆனால் மிருதுவான பழங்களை உதாரணமாக வாழைப் பழம் போன்ற பழங்களை முழுவதுமாக தின்றுவிடும் வறட்சியான காலங்களில் பழங்கள் கிடைக்காத பொழுது நெற்கதிர்கள் மற்றும் பருப்புவகைகளை தேர்ந்தெடுத்து உண்ணும் அதனால் இது விவசாயத்திற்கு எதிரியாக அக்காலத்தில் கருதப்பட்டது ஒருவேளை அதனால் கூட இது அதிக அளவில் வேட்டையாடப் பட்டு இருக்கலாம்.தற்பொழுது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நிலவி வரும் கடும் வறட்சியால் குறைந்த அளவிலேயே காணப்படும் இந்த பழந்திண்ணி வௌவால்கள்  இனம் முழுவதுமாக அழிந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.இயற்கையின் சமநிலையை உறுதி செய்ய இவ்வினத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

செய்தி : காரைக்காலில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் கும்பகோணம் -திருவாரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குடவாசலில் சுமார் 100 ஆண்டுகள்  பழமை வாய்ந்த ஆலமரத்தில் 500க்கும் மேற்பட்ட பழந்திண்ணி வௌவால்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.இந்த பழந்திண்ணி வௌவால்களை வேட்டையாடுபவர்களை தடுத்து இந்த அறிய இனம் அழியாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆண்டு இருக்கும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...