தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

28-04-2017 நேற்று காரைக்கால் குடிமை பொருள் வழங்கல் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு ப.பார்த்திபன் அவர்களின் தலைமையில் நுகர்வோர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் மற்றும் காரைக்காலில் உள்ள எரிவாயு முகவர்கள் கலந்துக் கொண்டனர்.அப்பொழுது காரைக்காலில் விநியோகிக்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் தரமானதாக இல்லை,சரியான நேரத்தில் தரப்படுவது இல்லை,ரசீதில் குறிப்பிட்டு இருக்கும் தொகையை காட்டிலும் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது உட்பட கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப் படுவது தொடர்பாக பல புகார்களை நுகர்வோர் சங்கங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாரத் பெட்ரோலிய நிறுவன மேலாளர் ஹரிகிரிஷ்ணன் வீட்டில் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டரில் எரிவாயு கசிவு இருந்தால் 1906 மற்றும் 1800224344 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறினார்.

இக்கூட்டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் அவர்கள் பேசியது.

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிப்பவரிடம் இருந்து உரிய ரசீதை பெற்றப் பின்னரே பணம் வழங்க வேண்டும்.

ரசீதில் குறிப்பிட்டு இருக்கும் தொகையை விட அதிகம் பணம் கோரப்பட்டால் 9487685466 என்ற அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

வரும் காலங்களில் இதைப்போன்ற நுகர்வோர் கலந்தாய்வு கூட்டங்கள் குறிகிய கால இடைவெளிக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறோம்

காரைக்கால் மாவட்டத்தில் எரிவாயு உருளைகளுக்கு (GAS CYLINDERS )ரசீதில் குறிப்பிட்டிருக்கும் தொகையை விட அதிக தொகை வசூலிக்கப்பட்டால்  புகார் தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்  : 9487685466 

 வீட்டில் பயன்படுத்தும் எரிவாயு உருளைகளில் (GAS CYLINDERS ) எரிவாயு கசிவு இருந்தால் புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் : 1906 மற்றும் 1800224344

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...