தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கும்பகோணம் ,மயிலாடுதுறை,சீர்காழி மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் காரைக்கால் மதுபானங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றதாம்

புதுச்சேரி மாநிலத்தில் வரி மூலம் அரசுக்கு அதிக வருவாயை  பெற்று தரும் முக்கியமான தொழில்களில் ஒன்று மதுபானக்கடை தொழில்.தமிழகத்தை போன்று அல்லாமல் அரசியல் பின்புலமும் பண செல்வாக்கும் அதிகமாக இருக்கும் நபரே இந்த மாநிலத்தில் மதுபானக் கடைககளை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நிலை இதுநாள் வரையில் இருந்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து புதுச்சேரி,காரைக்கால் மாவட்டங்களில் நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த பெரும்பாலான மதுபானக் கடைகள் மூடப்பட்டன.இதனால் புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு ₹500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.வேறு இடங்களுக்கு இந்த மதுபானக் கடைகளை மாற்ற முயற்சிக்கும் பொழுது மக்களின் எதிர்ப்பும் அதிகரித்து வருவதால் மதுபானக் கடை உரிமையாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி உள்ளனர்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தை சுற்றியுள்ள தமிழிக நகரங்களான கும்பகோணம்,நாகப்பட்டினம்,சீர்காழி,மயிலாடுதுறை உள்ளிட்ட நகரங்களிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காரைக்கால் மதுப் பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாம்.இதை பெட்டிக்கடைத் தொழில் போல் அங்கே சிலர் செய்து வருகின்றனராம்.மேற்குறிய நகரங்கள் யாவும் காரைக்காலில் இருந்து அதிகபட்சமாக வெறும் 60 முதல் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதால் இங்கிருந்து மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்று தமிழகத்தில் விற்பனை செய்து அதிக லாபம் அடைந்து வருகின்றனராம்.

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் இப்போதைக்கு மதுக்கடைகளை மூடினாலும் மது விற்பனையை ஒழிக்க முடியாது என்பது தான்.ஆனால் இதைப்போன்ற தமிழக பகுதிகளில் அடிக்கடி பிடிபடும் வெளிமாநில மதுபானங்கள் விவகாரத்தை கேள்விப்படும் பொழுது தான் சோதனைச் சாவடி என்று  ஒன்று மாநில எல்லையில் எதற்கு உள்ளது என்ற கேள்வி மனதில் எழுகிறது.

செய்தி : அனுமதி இன்றி கும்பகோணத்தில் வெளிமாநில மதுபானங்கள்  விற்பனை செய்த இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்த 180மி.லி அளவிலான 100 வெளிமாநில மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனராம்.உண்மை என்னவென்றால் 100ல் ஒருவர் தான் இப்படி எப்போதாவது மாட்டிக் கொள்கிறார் மீதம் உள்ள 99 சதவிகித  பெரும் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகின்றனர்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...