தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 93° புதுச்சேரியில் 94.5° வெப்பம் பதிவானது

09-04-2017 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான அளவின் படி கடந்த 24 மணி நேரத்தில் அதாவது 08-04-2017 (நேற்று) காலை 8:30 மணிமுதல் 09-04-2017 (இன்று) காலை 8:30 மணிவரையில் பதிவான வெப்பநிலையில் படி காரைக்கால் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 93.2° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 82.22° ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.அதே போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 93.38° ஃபாரன்ஹீட்டும்குறைந்த பட்சமாக 81.86° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.


தமிழகத்தில் அதிகமாக கரூர் மாவட்டத்தில் 106.16° ஃபாரன்ஹீட்டும் அதுக்கு அடுத்தபடியாக சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் 104.18° ஃபாரன்ஹீட்டும் வேலூரில் 103.64° ஃபாரன்ஹீட்டும் பதிவானது.திருச்சி,தஞ்சை,கோயம்புத்தூர், மதுரை,பாளையம்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 100° ஃபாரன்ஹீட்டும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.

நாம் அனைவரும் அதிகபட்ச வெப்பநிலை குறித்தே பேசி வருகிறோம் ஆனால் தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக குறைந்த பட்ச வெப்பநிலை அளவில் மாற்றம் இருப்பதை காண முடிகிறது.ஆம் தமிழகம் முழுவதும் குறைந்த பட்ச வெப்பநிலையானது அதிகரித்து வருகிறது அப்படியானால் இரவு நேர வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்று அர்த்தம்.காரைக்கால்,நாகப்பட்டினம்,புதுச்சேரி,கடலூர் போன்ற கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் இதைபோன்றக் காலங்களில் சாதாரணமாகவே இரவு நேர வெப்பநிலை மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே காணப்படும் ஆனால் தற்பொழுது சேலம்,கோயம்புத்துர்,திருச்சி ,தஞ்சாவூர்,கரூர் போன்ற மாவட்டங்களிலும் இரவு நேர வெப்பநிலையானது  அதிகரித்து வருகிறது.


கடலோர பகுதிகளில் அதிகபட்சமாக தொண்டியில் 98.6° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...