தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

இன்று காரைக்காலில் 93° நாகப்பட்டினத்தில் 95° வெப்பம் பதிவானது

06-04-2017 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான அளவின் படி கடந்த 24 மணி நேரத்தில் அதாவது 05-04-2017 (நேற்று) காலை 8:30 மணிமுதல் 06-04-2017 (இன்று) காலை 8:30 மணிவரையில் பதிவான வெப்பநிலையில் படி காரைக்கால் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 92.66° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 80.78° ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.அதே போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 95° ஃபாரன்ஹீட்டும்குறைந்த பட்சமாக 81.14° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக 106.16° ஃபாரன்ஹீட்டும் வேலூரில் 104° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது திருச்சி,திருப்பத்தூர்,தஞ்சாவூர்,மதுரை ,தர்மபுரி போன்ற மாவட்டங்களிலும்  வெப்பம் 100° ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.


இப்படி 100° ஃபாரன்ஹீட்டை தாண்டி பல மாவட்டங்களில் அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ள நிலையில் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் வசிக்கும் மக்கள் அதற்குள்ளேயே வெப்பத்தின் அளவை தாங்க முடியவில்லை என்று கூறிவருகின்றனர்.அதற்கு காரணம் கடலுக்கு மிக அருகில் வசிப்பது தான்.பொதுவாக கடலோர நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு வியர்வைக்கு பின் உடல் பிசுப்பிசுவென ஆகிவிடும் ஆனால் தமிழகத்தின் மத்த மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெப்பம் சற்று குறைந்தே காணப்படுகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...