தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஒழுகைமங்களம் கோயில் பங்குனி திருவிழா ஆரம்பம் -இனி காரைக்காலில் என்னவெல்லாம் நடக்கப்பபோகுதோ ?

தரங்கம்பாடியை அடுத்து உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையடுத்து இன்று சப்பர வீதியுலா நடைபெற இருக்கிறது.மேலும் ஒழுகைமங்களம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் நடைபெற இருக்கும் நிகழ்வுகளை கீழே காணலாம்.

09-4-2017   - தேர் திருவிழா
14-04-2017 - தெப்பத் திருவிழா
16-04-2017 - உத்திரவாய் துடைப்பு உற்சவம்
23-04-2017 - மஞ்சள் நீர் உற்சவம்
30-04-2017 -  விடையாற்றி உற்சவம்

சரி இதற்கும் காரைக்காலுக்கும் என்ன சம்பத்தம் என்று நீங்கள் கேட்கலாம்.இதோ உங்கள் கேள்விக்கான விடை காரைக்காலில் அடுத்த ஓராண்டுக்கு அவ்வப்பொழுது இளைஞர்களுக்குள் நடக்கவிருக்கும் ஏரியா தகராறுகளுக்கு அடிப்படை பிரச்சனை இங்கிருந்து தான் ஆரம்பிக்கும்.உங்களில் சில பேருக்கு நான் மேலே கூறிய விஷயம் சற்று புதியதாக தோன்றலாம்.ஆனால் பல ஆண்டு காலமாக இன்னும் சொல்லப்போனால் தலைமுறை தலைமுறையாக ஒழுகைமங்கலம் கோவில் திருவிழாவில் இரு வேறு ஏரியாக்களை சேர்ந்த இளைஞர்கள் சண்டையிட்டுக் கொள்வதும் அதன் பின் அடுத்த கோயில் திருவிழா வரும் வரை காரைக்காலில் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எல்லாம் சண்டையிட்டு ஒருவர் மண்டையை இன்னொருவர் உடைத்துக்கொள்ளும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.இதில் சில சண்டைகள் பெரிய பிரச்சனைகளாகவும் உருவெடுத்து இருக்கிறது என்பது தான் உண்மை.இந்த உண்மையை விஷயம் தெரிந்த யாரும் மறுக்க மாட்டார்கள்.இதை யார் ஆரம்பித்து வைத்தார் என்று தெரியவில்லை ஆனால் எப்பொழுது இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதனை இன்றைய காரைக்கால் இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...