தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பார்வையிட நாளை முதல் முன் பதிவு ஆரம்பம்

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி வருகின்ற மே மாதம் முதல் வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பார்வையிட பிற்பகல் 12:00 மணி முதல் 1:30 மணிவரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டு ஆளுநர் மாளிகையை பார்வையிட விரும்புபவர்கள் புதுவை ஆளுநர் மாளிகையின் அதிகார பூர்வ இணையதளமான rajnivas.py.gov.in என்ற முகவரியில் முன்பதிவு சைகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.இது குறித்த முழு தகவலுக்கு https://goo.gl/ZwvGHp என்ற முகவரியை சொடுக்குங்கள்.

இந்த தகவல் வெளியாகியவுடன் முன் பதிவு செய்ய அந்த இணையதளத்தை நோக்கி  படையெடுத்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.ஆம் ஆளுநர் மாளிகையை பார்வையிடுவதற்காக முன்பதிவு குறித்து ஒரு தகவலும் அதி இடம்பெற்றுக்க வில்லை.இந்நிலையில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது முகநூல் பக்கத்தில் ஏப்ரில் 29/04/2017 அல்லது  30/04/2017 முன்பதிவு தொடங்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...