தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நான் புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் - கிரண்பேடி

நேற்று புதுச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமணை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது தான் மக்களுக்கு சேவை செய்யவே  வந்துள்ளேன் எனது பணியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என கூறியுள்ளார்.மேலும் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தருவது குறித்து அவர் பேசுகையில் தான் வியாபாரி இல்லை என்றும் பணம் மரத்தில் காய்ப்பது கிடையாது என்றும் மக்களுக்கு நலன் தரக்கூடிய திட்டத்தை முழுமையாக தயாரித்து அனுப்பினால் பணம் தருவார்கள் என்றும் கூறினார்.மேலும் அவர் கோப்புகளை முடக்குவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் தான் எந்த கோப்புகளையும் முடக்க வில்லை என்றும் சில கோப்புகளில் அமைச்சரவைகளோடு மாற்றுக் கருத்து இருந்ததால் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் அதை தான் நானும் செய்தேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் புதுச்சேரி நலவழித்துறை அமைச்சர் திரு கந்தசாமி ஆளுநர் கிரண்பேடி பாஜக வை வைத்து அரசியல் செய்து வருகிறார் எனவும் புதுச்சேரிக்கு வேண்டிய நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தந்து கருத்தை தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் நேற்று குடியரசு தலைவரை டில்லியில் சந்தித்த முதல்வர் நாராயணசாமி ஆளுநரும் முதல்வரும் தம் நிலைக்கு உட்பட்டு இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.மேலும் கிரண்பேடிக்கு தேவையான பாதுகாப்பை அளிக்க தயாராக உள்ளோம் என்று கூறினார்.

எது எப்படியோ புதுச்சேரியில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே நடக்கும் இந்த அதிகார மோதலால் கிடப்பில் போடாப்பட்டு இருக்கும் மக்கள் நல திட்டங்கள் ஏராளம் என்று மட்டும் தெள்ள தெளிவாக தெரிகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...