தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் அருகே சாலையில் மரகதலிங்கம் விற்பனை

மரகதம்(Emerald) Be3Al2(SiO3)6 இது உலகின் அரிதான கனிம கலவைகளில் ஒன்று.மரகத கற்கள் ராசிகற்களாகவும் சில மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.பச்சை நிறத்தில் காணப்படும் இவ்வகை மரகதகற்களுக்கு உலகெங்கிலும் அதிக தேவை  உண்டு.சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மரகத கற்களை கொண்டு செய்யப்படும் ஆபரணங்களை பயன்படுத்தும் முறை இந்தியாவிலும்,எகிப்திலும் காணப்பட்டதாக சில வரலாற்று ஆய்வு தகவல்கள்  தெரிவிக்கின்றன.இயற்கையான முறையில் உருவான மரகத கற்களை பயன்படுத்தி சிவலிங்கங்கள் செய்து அதனை வழிபடும் பழக்கம் நம் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் மரகத லிங்கம் விற்பனை செய்ய முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.காரைக்காலில் இருந்து திட்ட திட்ட 50 கி.மீ தொலைவில் உள்ள கோவிந்தபுரம் என்ற ஊரில் இரு இளைஞர்கள் அந்த மரகத லிங்கத்தை 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது.அந்த மரகத லிங்கம் தற்பொழுது ஆய்வுக்காக டில்லிக்கு அனுப்பப்பட்டு உள்ளது முழுமையான ஆய்வுக்கு பிறகே அதன் உண்மை மதிப்பு தெரியவரும்.தோராயமாக அதன் மதிப்பு ஒரு சில கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...