தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மீனவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாகை மாவட்ட மீனவர்களும் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த  6 மீனவர்களை கடலுக்குள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபொழுது போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த 02-04-2017 அன்று கைது செய்தனர்.ஃ பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற அவர்களை எல்லை தாண்டி போதைப்பொருட்கள் எடுத்து வந்ததாக கூறுவது இலங்கை அரசின் நாடகமே என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் பொய் வழக்குப் பதிவு செய்து வேண்டுமென்றே காரைக்கால் மீனவர்கள் 6 பேரை கைது செய்து வைத்திருக்கும் இலங்கை அரசை கண்டித்தும்.கைது செய்யப்பட்ட அந்த 6 மீனவர்களை மீட்கக் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையிலும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுப்பது என்று காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த 11 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அதன்படி கடந்த 04-04-2017 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும்  08-04-2017 முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 11-04-2017 அன்று (நேற்று) அக்கரைப்பேட்டையில் நடைபெற்ற நாகை மாவட்ட மீனவ பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் காரைக்கால் மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டு நாகை மாவட்டத்தை சார்ந்த 54 மீனவ கிராமத்தை சார்ந்த மீனவப் பிரதிநிதிகள் ஆதரவோடு  தீர்மானம் இயற்றப்பட்டது.அதன் படி நேற்று முதல் கடலுக்குள்  மீன் பிடிக்க செல்லாமல் நாகை மாவட்ட மீனவர்களும் காலவரையற்ற தொடர் போராட்டத்தை தொடங்கினர்.மீன் பிடி தடைகாலம் கூடிய விரைவில் வர இருப்பதால் இன்னும் சில தினங்களில் மீன் உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...