தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தேசிய நெடுஞ்சாலையா அல்லது மாநில சாலையா என்று முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் உள்ள சாலைகளை வகை மாற்றம் செய்யும் விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி விதிகளை  மீறி செயல்படுவதாக ஆளுநர் கிரண்பேடி கூறியிருந்தார்.இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் சாலைகளை வகை மாற்ற மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் நான் சட்ட விதிகளை மீறி செயல்படுவதாக கூறிய ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு நான் பதில் கூற மாட்டேன் ஆனால் எதற்காக கடிதம் எழுதினேன் என்று கூற கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.மேலும் இது தொடர்பாக அவர் பேசுகையில் புதுச்சேரிக்கு விற்பனை வரி ,கலால்  வரி ,சுற்றுலா ஆகிய மூன்று துறைகளின் மூலம் தான் அதிக வருவாய் கிடைக்கிறது.இதில்  குறிப்பாக கலால் துறை மூலம் மட்டும் ஆண்டுக்கு 740 கோடி ரூபாய் வரை வருவாய் புதுச்சேரி அரசுக்கு கிடைக்கிறது.உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 164 மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டன.தற்பொழுது புதுச்சேரியில் ஒரு புதிய தேசிய நெடுஞ்சாலை வரவுள்ளது.அதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள உட்புற சாலைகளை மாவட்ட சாலைகளாக அறிவிக்கக் கோரி கடிதம் அனுப்பினேன் என்று அவர் கூறினார்.மேலும் ஒரு சாலை தேசிய நெடுஞ்சாலையா அல்லது மாநில சாலையா என்று முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...