தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நகர சாலைகளாக வகைமாற்றம் செய்யும் விவகாரம் -ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி இடையே நேரடி மோதல்

 உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நாடெங்கிலும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.அதன்படி புதுச்சேரி மாநிலத்திலும் நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த மதுக்கடைகள் மூடப்பட்டன.சிறிய மாநிலமான புதுச்சேரியில் இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.விதிகளுக்கு உட்பட்டு மதுக்கடைகளை நெடுஞ்சாலைகளின்  அருகில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற முயற்சித்தாலும் அது மக்கள் குடியிருப்பு பகுதிகளாக உள்ளது இதனால் மதுக்கடைகளை திறப்பதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் நடை மாநிலமான தமிழ்நாட்டில் தேசிய நெஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக வகை மாற்றும் தீர்மானத்திற்கு ஆணையர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.இதனையடுத்து புதுச்சேரியிலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மறு வகைப் படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இந்த சாலைகள் மறு வகைப்படுத்தப்படும் கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவுகளாக இருந்தாலும் தன்னுடைய கருத்தைக்கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.மேலும் இந்த விவகாரத்தில் முதல்வரின் கடிதம் முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் நிர்வாக விதிகளை மீறி அனுப்பப்பட்டு உள்ளது .இது குறித்து சம்பந்தப் பட்ட துறைக்கு தெரியப்படுத்துவேன் என கூறியுள்ளார்.

வழக்கமாக அமைச்சர்கள்,அரசு,அதிகாரிகள் என்று குறிப்பிட்டு கூறும் ஆளுநர் கிரண்பேடி இம்முறை முதல்வரின் செய்லபாடுகள் நடைமுறைகளை பின்பற்றாமல் உள்ளது என்று கூறியுள்ளார்.இது இந்த விவகாரத்தில் முதல்வருக்கும் - கவர்னருக்கு இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளதை உறுதிசெய்கிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...