தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு ₹30 கோடி நிதி வழங்க ஒப்புதல் வழங்கியது ஜிப்மர் - முதல்வர் நாராயணசாமி

காரைக்கால் அரசு மருத்துவமனையில் அமைச்சர்களுடன் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் நாராயணசாமி அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும் பொதுமக்களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார்.அப்பொழுது சிடி ஸ்கேன் ,எண்டோஸ்கோப்பி போன்ற கருவிகள் வேலை செய்வதில்லை மேலும் மருத்துவர்கள் எழுதும் மருந்துக்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர் பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் ஆட்சியில் படிப்படியாக காரைக்கால் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு வருகிறது அதில் ஒரு அங்கமாக தேவையான மருந்துக்களை இங்குள்ள மருத்துவர்களே வாங்கிக்கொள்ளும் அளவிற்கு அதிகாரம் வழங்கியுள்ளோம்.காரைக்கால் அரசு மருத்துவமனையை தரமானதாக மாற்ற இந்த அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது அதில் ஒரு பகுதியாக காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை கிழை காரைக்கால் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி மேம்படுத்த ₹40 கோடி வழங்க ஒப்புக்கொண்டது.அதன்படி வரும் மே மாதம் ₹30 கோடியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது.குறிப்பாக புற்று நோய் அறுவை சிகிச்சை ,இருதய நோய்,நரம்பியல் சம்பத்தப்பட்ட நோய்கள் உள்ளிட்டவைகளுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறலாம் என்ற நிலை ஏற்படும்.இதனால் காரைக்கால் மக்களை மட்டுமின்றி தன்னை சுற்றியுள்ள தமிழக பகுதி மக்களும் பயனடைவர் என்று கூறினார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...