தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கிரண்பேடியின் அடுத்த அதிரடி :36 கோடி ரூபாய் தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படாதது குறித்து விசாரணை

 சமீப காலமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் புதுச்சேரி அமைச்சர்களுக்கும்  இடையே நிலவி வந்த கருத்து முரண்பாடுகள் நம் அனைவருக்கும் தெரிந்ததே.அமைச்சர்கள் கிரண்பேடி மீது குறை சொல்வதும் அதற்கு ஆளுநர் ஒரு விளக்கம் கொடுப்பதும் என்று முன்னுக்கு பின் முரணான நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று  வருகின்றன .இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி ஒரு புதிய அதிரடி உத்தரவை தனது செயலர் மூலம் பிறப்பித்துள்ளார்.அது என்னவென்றால் புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் தொழிலார் வைப்பு நிதி வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தப்படாதது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

நான் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியிருந்தது போல புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் அரசு நிறுவனங்களை விட அரசு சார்பு நிறுவனங்களே அதிகம் அதைப்போன்று தற்பொழுது கூட்டுறவு அமைப்புகளும் அதிகரித்து விட்டன.இந்த கூட்டுறவு அமைப்புகளில் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பன்மடங்கு உயர்ந்து உள்ளது.இந்நிலையில் ஊழியர்களிடம் வைப்பு நிதிக்கென வசூலிக்கப்பட்ட ₹36 கோடியை இன்னும் வைப்பு நிதி கணக்கில் செலுத்தவில்லை என்று வைப்பு நிதி கூடுதல் ஆணையர் பிடி.சின்ஹா ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.அதன் பேரில் இது குறித்து அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ள ஆளுநர் கிரண்பேடி தொழிலாளர் துறை செயலருக்கு உத்தரவிட்டு உள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...