தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி மாநிலத்தில் பேருந்துக் கட்டணம் உயர வாய்ப்பு

புதுச்சேரி மாநிலத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இன்று புதுச்சேரி போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜஹான் தலைமையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப் படவில்லை எனவும்  டீசல் விலை உயர்வு,காப்பீடு மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக லாபகரமாக தொழிலை நடத்த முடியவில்லை எனவே பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணத்தை ₹3 ரூபாயிலிருந்து ₹8 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உட்பட ஐந்து முக்கிய கோரிக்கைகளை தனியார் பேருந்து உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.


இக்கூட்டத்தின் முடிவில் பேசிய புதுவை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜஹான் புதுச்சேரியில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...