தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி முதலியார்பேட்டையில் விலை உயந்த கார் கண்ணாடிகளை குறிவைத்து தாக்கும் மர்ம கும்பல்கள்

26-04-2017 நேற்று புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதிக்கு உட்பட்ட சுதானா  நகர் ,சுகாதார ஊழியர் குடியிருப்பு ,தென்னஞ்சோலை வீதி ,கந்தப்ப முதலியார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாசலில் நிறுத்தப்பட்ட இருந்த கார்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசு தாக்குதல் நடத்தியுள்ளனர்.நேற்று ஒரேநாளில் மட்டும் அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட கார்கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன.இச்செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் வழங்கவே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போல சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் பகுதிகளிலும் வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை குறிவைத்து இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...