தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுவை மாநிலத்தில் திருநங்கைகளுக்கு உண்மையில் மதிப்பளிக்கப்படுகிறதா ?

தமிழகத்தில் திருநங்கை சமூகத்தை சார்ந்த ஒருவர் பல்வேறு சோதனைகளையும் கடந்து காவல்துறையின் பல்வேறுக் கட்ட பயிர்ச்ச்சிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்து இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்துறையில்  உதவி ஆய்வாளராக பதிவு ஏற்றிருக்கும் இந்தத் தருணத்தில் புதுவை மாநிலத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கு இந்த சமூகம்  உண்மையில் மதிப்பு வழங்கி வருகிறதா என்ற கேள்வியை முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.இந்த கேள்வியை என்னை முன்னிறுத்த தூண்டியது சமீபத்தில் சாலையில் நடைபயணம் மேற்கொள்கையில் நான் கண்ட சம்பவம்.திருநங்கை ஒருவர் மிதிவண்டியில் சென்றுக் கொண்டு இருக்கிறார் அவரை பின்தொடர்ந்து வழிமறைத்த இருசக்கர வாகனத்தில் வந்த இரு சிறுவர்கள் அவர்களை சிறுவர்கள் என்று கூட சொல்ல முடியாது ஒரு 13 அல்லது 14 வயது நபர்கள் அந்தத்  திருநங்கையைப் பார்த்து ஊழை இடுகின்றனர் அதற்கு அந்த திருநங்கை உங்கள் வயது என்ன என் வயது என்ன எதற்கு என்னைப்பார்த்து இப்படி கேலி செய்கிறீர்கள் என்று கேட்கிறார் அதற்கு அந்த 13 வயது நிறைவடைந்த நபர்கள் சாலையில் அனைவரும் பார்க்க சத்தம் போட்டு அவரை கிண்டலடித்துக் கொண்டே இருந்தனர் ஒரு நாகரிகம் கருதி அவர்கள் சொல்லிய வார்த்தைகளை இங்கு நான் பதிவிட விரும்பவில்லை.நான் தடுக்கலாம் என்று செல்கையில் அந்த இரு நபர்களும் இருசக்கர வாகனத்தில் விரைவாக சென்று விட்டனர்.அந்த திருநங்கை சாலையின் நடுவே அவமானம் தாங்க  முடியாமல் சிறிது நேரம் செய்வதறியாமல் நின்று இருந்தார்.பின்னர் சிறிது நேரத்தில் மிதிவண்டியில் ஏறி கலக்கமாக அங்கிருந்து சென்று விட்டார் .

இதற்கான உண்மைக்  காரணம் என்ன ? சமூகத்தில் திருநங்கைகளுக்கு ஏன் இப்படி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ? இதுவும் ஒரு வகையான வன்கொடுமை தானே.நான் மேலே விளக்கிக்கூறிய  இச்சம்பவத்தை  திருநங்கைகளுக்கு எதிரான ஒரு விஷயமாக மட்டும் நான் பார்க்கவில்லை இது ஒட்டுமொத்த மகளிருக்கும் எதிரான ஒரு விஷயமாகவும் தான் பார்க்கிறேன்.எதிர் பாலினத்தை சார்ந்த ஒருவருக்கு உணர்வு உண்டு என்பது குறித்த புரிதலும் போதிய அறிவும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சரி வர வழங்கப்பட வில்லையோ என்று தோன்றுகிறது.தன்  போக்கில் இயங்கிக்கொண்டு இருக்கும் ஒருவரை அவர் வேறு பாலினத்தை சார்ந்தவர் என்கிற ஒரே காரணத்துக்காக அவரை கேலி செய்வதும் அவருடைய பாதையில் குறுக்கிடுவதும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளகூடிய விஷயங்கள் அல்ல.இதைப்பற்றி ஒரு சிலரிடம் கருத்துக்கேட்ட பொழுது சில ஆண்களே திருநங்கைப் போல வேடமிட்டு பிச்சை எடுப்பது,திருடுவது போன்று இன்னும் பல பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.இன்னும் ஒரு சிலர் அவர்கள் பணம் சம்பாரிக்க ஒரு சில காரியங்களில் ஈடுபடாமல் சுயமரியாதையுடன் வாழ்ந்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என கருத்து தெரிவித்தனர்.

இதையெல்லாம் ஒன்று சேர்த்து பார்க்கும் பொழுது எனக்கு தோன்றியது என்ன வென்றால் அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பது சரி ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்த திருநங்கைகளுக்கு இது சாத்தியம் ஆனால் அடுத்த வேலை சோற்றுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் குடும்பத்தில் பிறந்த ஒரு திருநங்கைக்கு நம்மில் எத்தனை பேர் வேலை வழங்கி மாத சம்பளம் வழங்க தயாராக இருக்கிறோம்?.திருநங்கை களை மாரச்சொல்லும் நாம் இதைப்போன்ற விஷயங்களில் நமது குறுகிய எண்ணத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.

ஒரு முறை ரயில் பயணத்தில் ஒரு திருநங்கை ஒருவர் என் சட்டைப்பையில் கையைவிட்டு பணத்தை எடுத்தார் அப்பொழுது நான் அவரிடம் அம்மா என் செலவுக்கு வேண்டுமம்மா என்றேன் உடனே என் சட்டையில் மீண்டும் அந்த பணத்தை வைத்து விட்டு தலைகுனிந்தபடியே சென்றுவிட்டார்.அப்பொழுது தான் எனக்கு ஒரு விஷயம் தெரியவந்தது அது என்ன வென்றால் அவர்களை நாம் தாயை போல மதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் ஆனால் நாம் அவர்களை ஐந்தறிவு படைத்த ஒரு விலங்கைபோல பார்ப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.நம் வீட்டில் இப்படி ஒருவர் இருந்தால் நாம் அவர்களை இப்படியா உதாசீனப் படுத்துவோம்.

திருநங்கைகளுக்கு எதிரான விஷயங்கள் இந்த சமூகத்தில் மாறவேண்டும் என்று சொன்னால் அவர்கள் சுயமரியாதையுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.நம் பங்குக்கு நாமும் நமது அரசாங்கமும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை அவர்களுக்கு அமைத்துக்கொடுக்க வேண்டும்.இது எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கு இருப்பது போல மனிதர்களின் பிற பாலினத்துக்கும் அனைத்து உணர்வுகளும் உண்டு என்கிற புரிதல் சிறு வயதிலிருந்து வர வேண்டும்.அப்பொழுது தான் இந்த விஷயத்தில் மாற்றங்கள் ஏற்படும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...