தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சிதம்பரம் அருகே சிவன் கோயிலில் காணாமல் போன ஐம்பொன் சிலை

சில மாதங்களுக்கு முன் பிரபல சிலை கிடத்தில்  மன்னன் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் அவரிடம் இருந்து ஏராளமான பழங்கால சிலைகள் கைப்பற்றப் பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்த தகவல்கள் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.இன்றளவும் பறிமுதல் செய்யப்பட்ட அந்த சிலைகளின்  ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.இந்திய கோயில்களில் இருந்து கிடத்தப்படும் பழங்கால சிலைகளுக்கு வெளிநாடுகளில் செம கிரக்கியாம் அதுவும் 1000 ஆண்டுகள் பழமையான சிலையென்றால் அதன் மதிப்பு கோடியையும் தாண்டுமாம்.இப்படி பல தரகர்களின் கைமாறி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சிலைகளின் உலோகங்கள் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டு அதில் சில தனித்தன்மை வாய்ந்த உலோகங்களை தேர்ந்தெடுத்து அதை புதிய மருந்துகள் தயாரிக்கவும் ஆயுதங்கள் தயாரிக்கவும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக செய்தி.சரி அது பெரிய அளவிலான பணம் புரளும் வியாபாரம் அதை இன்னோரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.இப்பொழுது நம் நாட்டில் காணாமல் போய்க்கொண்டு இருக்கும் சிலைகள் பற்றிய விஷயத்துக்கு வருவோம்.

இப்படி எத்தனை சிலை கிடத்தல் மன்னன்களை கைது செய்தாலும் தமிழக கோயில்களில் சிலைகள் காணமல் போவது என்னவோ குறைந்தபாடில்லை.இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழபருத்திக்குடி கிராமத்தில் சிவன் கோயில் ஒன்றில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை காணாமல் போயுள்ளது.சுமார் இரண்டரை அடி உயரமும் 22 கிலோ எடையும் கொண்ட இந்த ஐம்பொன் சிலையை கடந்த திங்கட்கிழமை இரவு பூட்டிக்கிடந்த கோயிலின் பூட்டை உடைத்து சிலர் திருடி சென்று விட்டதாக  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.வெறும் சிலை தானே அதனால் என்ன ? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறையான அதிர்வுகளை குறைத்து நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தும் நோக்குடன் குறிப்பிட்ட ஒரு சில உலோகங்களை தேர்ந்தெடுத்து இச்சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.இவைகள் அனைத்தும் விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள்.சாமானியனுக்கும்  பலன் தரும் வகையில் நம் நாட்டில் இந்த விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள் வீதியில் வைக்கப்பட்டுள்ளன.அந்த பொக்கிஷங்களின் மதிப்பை சாமானியன் உணரும் வரை இதைப் போன்ற சிலை திருட்டுக்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...