தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வேதாரண்யம் அருகே மதுவை ஒழிக்க பெண்கள் மது அருந்தி போராட்டம்

வேதாரண்யத்தை அடுத்த அண்ணாப்பேட்டை துளசியாப்பட்டினம் கிராமங்களுக்கு இடையில் வேதாரண்யம் பட்டுக்கோட்டை பிரதான சாலையில் தனியார் கட்டிடம் ஒன்றில் டாஸ்மாக் இயங்கிவருகிறது.பள்ளிக்கூடம் ,வாரச்சந்தை மற்றும் மக்கள் குடியிருப்புகள் நிறைந்திருக்கும் அப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி பல மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்த வண்ணம் இருந்தன.இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேசிய மற்றும் மாநில நெஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் குடியிருப்புகள் அதிகமாக இருக்கும் இப்பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக்கில் கூட்டம் அதிகரிக்க  தொடங்கியது இதனால் அப்பகுதி மக்களின் உடமைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து கடந்த 02-04-2017 அன்று அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது நடந்த பேச்சுவார்த்தையில் அக்கடையை அகற்ற ஒரு வார காலம் அவகாசம் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் ஒருவாரம் கழித்து ஒரு மாசம் அவகாசம் கேட்கப்பட்டது இதற்கு மக்கள் உடன்படவில்லை அதனால் மீண்டும் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.

இந்நிலையில் நேற்று இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி பெண்கள் சார்பில் மது அருந்தும் போராட்டம் நடத்தப்பட்டது.இதில் கலந்துக்கொண்ட பெண்கள் சிலர் மதுவை அருந்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏன் மதுவை ஒழிக்க மது அருந்தி போராட்டம் செய்ய வேண்டும் ? என்று நீங்கள் கேட்கலாம்.அதற்கு காரணம் ஊடகங்கள் மற்றும் மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க தான்.இவர்கள்  பல மாத காலமாக மேற்கொண்டு வந்த போராட்டங்கள் எதுவும் வெளியில் தெரியாமலேயே இருந்தது.ஆனால் இந்த பெண்கள் மது அருந்தும் போராட்டத்தால் இன்று அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி பேசப்பட்டு வருகிறது.மது அருந்தி போராடுவது என்பது தவறு என்றாலும் அவர்களை அப்படி செய்ய தூண்டியது எது என்கிற கேள்வி அங்கு எழுகிறது.எதுவாயினும் இந்த மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில் நமக்கு மகிழ்ச்சியே.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...