தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01-05-2017 www.karaikalindia.com இணையதளத்தின் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

01-05-2017 இன்று தொழிலார் தினம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொழிலார்களுக்கு என்று விழா,கொடை,விடுமுறை வழங்குவதை தவிர்பதற்காக நாள்காட்டிகளில் இருந்து  ஒரு மாதமே நீக்கப்பட்டதாக சில வரலாற்று ஆய்வாளர்கள் இன்றளவும் தெரிவித்து வருகின்றனர் இப்படி தொழிலாளர்கள் மீது பல்வேறு காலகட்டங்களில்  பல்வேறு விதமான அடக்குமுறைகள் அதிகாரவர்கத்தால் முன்னெடுக்கப்பட்டாலும் உழைக்கும் வர்க்கம் இன்றி உலகம் இயங்காது என்பது அதிகார வர்க்கத்துக்கும் தெரிந்திருக்கும் அதனால் தான் அவர்கள் அடக்க நினைத்தார்களே தவிர அழிக்க நினைக்கவில்லை அது சாத்தியமற்றது என்றும் கூட அவர்கள்  எண்ணியிருக்கக்கூடும்  இயற்கையின் பொற் கரத்தில் குருவிகள் காடு வளர்ப்பதையோ தேனீக்கள் தேன் சேகரிப்பதையோ யாராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் மே 1 தொழிலாளர் தினம் என்ற செய்தி வெறும் ஏட்டளவில் இடம்பெற்று இருந்தால் மட்டும் போதாது தொழிலார்கள்  அவர்களின் உரிமையை கேட்டுப் பெற ஒரு உந்துதலாக இந்த நாள் அமைய வேண்டும்.வீதியில் இறங்கி உழைக்கும் தொழிலார்களுக்காக கொண்டாப்படும் இந்நாளில் அவர்களின் சிரமத்தை உணர்ந்து வீட்டில் விடுமுறையின்றி அன்றாடம் உழைத்து வரும் தாய்மார்களையும்  அன்பு நெஞ்சங்களையும் நாம் புறம் தள்ளி விட முடியாது.நம் அன்னையின்,மனைவியின்,சகோதிரிகளின் தியாகத்தை நினைவு கூறும் நாளாகவும் இது அமைய வேண்டும்.

01-05-2017 இன்று உழைப்பாளர்கள் அனைவருக்கும் எங்களது இனிய தொழிலார் தின நல்வாழ்த்துக்களை இந்த இணையதளம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...