தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

03-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

03-05-2017 இன்று கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

03-05-2017 இன்று கோயம்புத்தூர்,நீலகிரி,தருமபுரி ,கிருஷ்ணகிரி,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

03-05-2017 தென்கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு நாகர்கோயில்,குலசேகரம்,பேச்சிப்பாறை போன்ற பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

03-05-2017 வட கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை.நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

03-05-2017 காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் மழைக்கான வாய்ப்பு சற்று குறைவு தான்.

03-05-2017 இன்று காலை 8:30 மணியளவில் பதிவான மழை அளவின் படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் திட்டத்திட்ட 60 மி.மீ மழை பெய்துள்ளது.இதுக்கு அடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டம் ஆயிக்குடியில் 50மி.மீ மழை பெய்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ,சேலம் ,தேனி,விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மழை பெய்துள்ளது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...