தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

04-05-2017 மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

2106 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் வறட்சியில் சிக்கி தவிக்கிறது.2017 நடப்பு ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பல பகுதியில் 100° பாரன்ஹீட் வெப்பத்தை தாண்டி பதிவாகிவரும் வேளையில். வருகின்ற 04-05-2017 மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதாக தெரிகிறது.வெயில் காலங்களில் தமிழகத்தில் அதிக வெப்பம் நிலவ கூடிய நாட்கள் இந்த அக்னி நட்சத்திர காலங்களில் தான் அமையும் என்று தமிழக மக்கள் நம்பி வருகின்றனர்.

04-05-2017 முதல் 28-05-2017 வரை தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்.அக்னி வெயில் பல்லு இலிக்கிதுனு சொல்லுவாங்க இந்த முறை அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகுறதுக்கு முன்னாடியே வெயில் மக்களை வாட்டி எடுத்துடுச்சி.

ஐயய்யோ அக்னி நட்சத்திரம் வந்துருச்சுன்னு யாரும் பயப்பட தேவையில்லை தற்பொழுது நிலவும் வானிலையே தொடர்ந்தால் வரும் வாரத்தில் தமிழக வட கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற அணைத்து மாவட்டங்களிலும் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.வட கடலோர மாவட்டங்களிலும்  கடல் காற்று வழக்கத்தை விட முன்பாகவே நிலப்பகுதிக்கு வர வாய்ப்பிருப்பதால் அங்கேயும் வரும் வாரத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பில்லை.


03-05-2017 நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...