தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

06-05-2017க்கு பிறகு மீண்டும் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெப்பம் உயரும்

இந்த வாரத்தில் தமிழகம் மாறும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் சற்று குறைந்து இருக்கிறது.நேற்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதியம் 12:30 மணிக்கு பிறகு மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது 12:30 மணிக்கு அதிகபட்சமாக 33.7° செல்சியஸாக பதிவாகியிருந்த காரைக்காலின் வெப்பநிலை மதியம் 1:30 மணியளவில் 30.4° செல்ஸியஸாக மாறியது வெறும் 1 மணிநேரத்தில் 3.3° செல்ஸியஸ் குறைந்து காணப்பட்டது.

03-05-2017 -12:30 மணிக்கு வெளியான ராடார் தகவல்
 03-05-2017 நேற்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகார பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்த அந்த ராடார் படத்தின் படி  திருவாரூர் ,மன்னார்குடி மற்றும் தஞ்சை மாவட்டம் வடுவூரில் இடியுடன் கூடிய மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்ததாக ஒரு நாளிதழ் செய்து வெளியிட்டு உள்ளது.

04-05-2017 இன்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொருத்தவரை 04-05-2017 இன்று மட்டும் 05-04-2017 நாளை மட்டுமே தற்போதைய வெப்பநிலை நீடிக்கும்.

06-04-2017 அல்லது அதெற்கு பிறகு நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் மீண்டும் வெப்பநிலை உயர்வு இருக்கும்.அதாவது 05-04-2017அன்று பதிவாகும் வெப்பநிலையை விட அதற்கு மறுநாள் 06-05-2017 அன்று 1° முதல் 3° செல்ஸியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்புகள் உள்ளது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...