தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் கடற்கரையில் குடும்பத்துடன் மாலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்

இந்த ஆண்டு அக்னி வெயிலின் தாக்கத்தால் பகல் நேர  வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மாலை நேரத்தில் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பள்ளி விடுமுறை நாள் என்பதால் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் இவ்வழியாக செல்லும் பொது மாலை நேரத்தில் காரைக்கால் கடற்கரையில் சிறிது நேரம் இளைப்பாறி ஓய்வெடுத்து செல்கின்றனர்.நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் காரைக்கால் கடற்கரை மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது.இந்த ஆண்டு இறுதியில் திருநள்ளாறு சனி பகவான் ஆலய சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதால் சனிக்கிழமைகளில் திருநள்ளாறுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது . அப்படி சனிக்கிழமைகளில் திருநள்ளாறுக்கு  வரும் பக்தர்கள் ஒரு நாள் முழுவதும் காரைக்காலை சுற்றியுள்ள கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மறுநாள் மாலை காரைக்கால் கடற்கரைக்கு வந்து இயற்கை காற்றை அனுபவித்து மகிழ்கின்றனர்.

காரைக்கால் கடற்கரையில் திடிரென மக்கள் இப்படி அதிக எண்ணிக்கையில் குவிந்து வருவதால் சில இடங்களில் சாலை நெரிசலும் ஏற்படுகின்றது.அதிகரித்து வரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் சரியாக ஏற்பாடு செய்யப்படாமல் இருப்பதால் மிகுந்த அவதிக்கு உள்ளானதாக சில சுற்றுலாப்பயணிகள் தங்களது வருத்தத்தை தெரிவித்துவிட்டும் செல்கின்றனர்.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...