தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-05-2017 நேற்று தேசிய டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சல் நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சமீப காலங்களில் நாம் மருத்துவ முறைகளில் மிக பெரிய வளர்ச்சி கண்டிருந்தாலும் டெங்கு போன்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மட்டுமே முற்றிலும் குணப்படுத்துவது சாத்தியமாகிறது.னாய் முற்றிய நிலையில் ஒருவரை குணப்படுத்தி மீட்டெடுப்பது மிகவும் சிரமமான ஒன்றாக கருதப்படுகிறது.இந்நிலையில் நேற்று 16-05-2017 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆறாத சுகாதார நிலையங்களில் நடத்தப்பட்டது.நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் டெங்கு காய்ச்சல் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமாகிறது இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 16-05-2017 மே 16 ஆம் தேதியில் டெங்கு நோய் தடுப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு கூட்டம் பேரணிகள் நடத்தப்பட உள்ளன.தரையை தொடாத தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களின் மூலமே டெங்கு நோய் பரவுகிறது.எனவே டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தேவையில்லாத கலன்களில் தேநீர் தேங்கி நிற்காமல் தடுக்க வேண்டும் மேலும் டெங்கு காய்ச்சலுக்கான ஆரம்ப கால அறிகுறிகள் தெரியவரும் பொழுதே அருகில் உள்ள மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.டெங்கு காய்ச்சலுக்கான ஆரம்ப கால அறிகுறிகள்
  1. அதிக காய்ச்சல்
  2. கடுமையான தலைவலி
  3. கண்களின் பின்பகுதியில் வலி
  4. வாந்தி மற்றும் குமட்டல்
  5. தசை மற்றும் எலும்பு வலி (உடல் வலி )
  6. உடலின் சுரபிக்களில் மாற்றம் ஏற்படுவதால் தொண்டைப் புண் ,நாவில் சுவை மாற்றம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது .
  7. தோல் தடித்து சிவப்படைந்து சினைப்பு உண்டாதல்
  8. மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள்
மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த முழுமையான தகவல்களுக்கு https://goo.gl/5qTZv4https://goo.gl/5qTZv4 என்ற முகவரியை சொடுக்கவும்

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...