தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஆளுநர் உரையுடன் நாளை 16-05-2017 அன்று புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது

16-05-2017 நாளை செவ்வாய்க்கிழமை புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.இதில் ஆளுநர் கிரண்பேடி உரையாற்ற உள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரி சட்டப்பேரவையில்  இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில் நாளை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது.புதுச்சேரி முதல்வரும் மாநில நிதியமைச்சருமான நாராயணசாமி தலைமையில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

16-05-2017 (செவ்வாய்க்கிழமை ) - ஆளுநர் கிரண்பேடி உரையாற்றுகிறார்.
17-05-2017 (புதன்கிழமை ) - ஜிஎஸ்டி சட்ட வரைவு மசோதா நிறைவேற்றப்படுகிறது.
18-05-2017 (வியாழக்கிழமை )   - பேரவை விடுமுறை
19-05-2017 (வெள்ளிக்கிழமை ) - பேரவை விடுமுறை
20-05-2017(சனிக்கிழமை ) - பேரவை விடுமுறை
21-05-2017(ஞாயிற்றுக்கிழமை ) - பேரவை விடுமுறை
22-05-2017(திங்கட்கிழமை ) - மீண்டும் அவை கூடுகிறது
23-05-2017 (செவ்வாய் கிழமை ) மற்றும் 24-05-2017 (புதன் கிழமை )  - ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் விவாதம்.
25-05-2017 - முதல்வர் மற்றும் நிதியமைச்சரான நாராயணசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் 08-06-2017 ஜூன் 8 ஆம் தேதி வரை நடைபெறும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...