தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-05-2017 இன்று கடல் காற்றால் சாதனையை தவறவிட்டு தப்பி பிழைத்தது புதுச்சேரி

16-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 102.2° பாரன்ஹீட் அதாவது 39° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல 16-05-2017 இன்று நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 101.12° பாரன்ஹீட் அதாவது 38.4° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

16-05-2017 இன்று புதுச்சேரியில் 105.44° பாரன்ஹீட் அதாவது 40.8° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.புதுச்சேரியில் 16-05-2017 இன்று நண்பகல் 12:30 மணிக்கே 40° செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகிவிட்டது அதே நிலை தொடர்ந்திருந்தால் குறைந்தபட்சம் 43° வரை பதிவாகியிருக்கலாம் ஆனால் திடீரென புதுச்சேரி கடல் பகுதியில் மேகங்கள் திரண்டதாலும்  கடல் காற்று உள் வந்ததாலும் அதன் பின் வெப்பநிலை குறைய தொடங்கியது.இதுவரை புதுச்சேரி வரலாற்றிலேயே மே மாதம் அதிகபட்சமாக 43.1° செல்ஸியஸ் கடந்த 2003 ஆம் ஆண்டு தான் பதிவாகியிருந்தது.23-05-2003 மற்றும் 30-05-2003 ஆகிய இரு தேதிகளில் 43.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.16-05-2017 புதுச்சேரி கடல் பகுதியில் இந்த திடீர் மாற்றம் ஏற்படாமல் இருந்திருந்தால் இன்று புதுச்சேரி வரலாற்றிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருக்க வாய்ப்புகள் இருந்தது.

16-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்.

திருத்தணி ------------------------>112.1°
வேலூர் ------------------------>109.22°
திருச்சி ------------------------>107.78°
சென்னை (புறநகர் )------------------------>107.42°
கரூர் பரமத்தி ------------------------>107.24°
தஞ்சாவூர் ------------------------>107°
பாளையம்கோட்டை ------------------------>105.98°
புதுச்சேரி ------------------------>105.44°
திருப்பத்தூர் ------------------------>105.44°
சென்னை (நுங்கம்பாக்கம் )------------------------>104.9°
பரங்கிப்பேட்டை ------------------------>104.54°
சேலம் ------------------------>104°
மதுரை ------------------------>103.64°
கடலூர் ------------------------>103.28°
தர்மபுரி ------------------------>103.1°
காரைக்கால் ------------------------>102.2°
நாகப்பட்டினம் ------------------------>101.12°

17-05-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.இன்றுடன் ஒப்பிடுகையில் நாளை இதே வெப்பநிலையை தொடரலாம் அல்லது 1° முதல் 2° செல்ஸியஸ் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...