தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

18-05-2017 இன்று சென்னையில் நண்பகல் 12:00 மணி வாக்கில் 109° பாரன்ஹீட் வெப்பம் பதிவானது

18-05-2017 இன்று காலை 10:30 மணிக்கே 104° பாரன்ஹீட் அதாவது 40° செல்ஸியஸ் வெப்பத்தை சென்னை எட்டியது மெல்ல அதிகரித்த வெப்பநிலையானது ஒரு கட்டத்தில் சென்னையயில் 18-05-2017 இன்று நண்பகல் 12:00 மணி வாக்கில் 109° பாரன்ஹீட்டாக அதாவது 42.7° செல்ஸாக  உயர்ந்தது.2017ஆம் ஆண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.சென்னையின்  வரலாற்றிலேயே இதுவரை மே மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையே  113° பாரன்ஹீட் தான்.கடந்த 2003 ஆம் ஆண்டு 31-05-2003 அன்று அதிகபட்சமாக 113° பாரஹீட் அதாவது 45 ° செல்ஸியஸ் பதிவாகியிருந்தது.இன்று இதே நிலை தொடர்ந்தால் சென்னையில் 45° செல்சியசையும் தாண்டி சென்னையில் வெப்பம் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.கடல் காற்று உள் புகுந்ததால் தற்பொழுது சென்னையின் வெப்பநிலையானது குறைந்து வருகிறது.இதற்கு மேல் வெப்பம் அதிகரிக்க இன்று வாய்ப்புகள் குறைவு என்பது போல் தான் தோன்றுகிறது.


18-05-2017 இன்று 11:30 மணியளவில் புதுச்சேரியில் 103.82° பாரன்ஹீட் அதாவது 39.9 வெப்பம் பதிவாகியுள்ளது அதேபோல காரைக்காலில் 100.4° பாரன்ஹீட் அதாவது 38° செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.

18-05-2017 இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனல் காற்று வீசிவருகிறது.
18-05-2017 மதியம் 1:30 மணியளவில் பதிவான ராடார் படம்.அதன்படி சென்னையின் கடலோர புறநகர் புகுதிகளில் இன்னும் சற்று நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.


.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...