தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கும்பகோணம் - மயிலாடுதுறை அருகே மீத்தேன்(Methane) திட்டம் -திடீர் பரபரப்பு -போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்துள்ள கதிராமங்கலம் என்ற கிராமத்தில் ஓஎன்ஜிசி(ONGC ) நிறுவனம் மீத்தேன் (Methane) எடுக்க முயல்வதாக வெளியான செய்தியால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் நகராட்சியில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவிலும் மயிலாடுதுறை நகராட்சியில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவிலும் காரைக்காலில் இருந்து திட்டத்திட்ட 50 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது தான் கதிராமங்கலம் என்ற கிராமம்.ஒரு காலத்தில் இயற்கை வளம் நிறைந்த பகுதியாக அறியப்பட்ட கதிராமங்கலம் தற்பொழுது வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.15 ஆண்டுகளுக்கு முன் ஓஎன்ஜிசி(ONGC ) நிறுவனம் இங்குள்ள 3 ஏக்கர் அளவிலான தனியார் நிலங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.அந்த குழாயை மாற்றுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக தடவாளப் பொருட்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில் நேற்று அப்பகுதியில் திரண்ட கிராம மக்கள் பழைய குழாயை மாற்றுவது என்ற பெயரில் ஓஎன்ஜிசி(ONGC ) நிறுவனம் தங்கள் பகுதியில் உள்ள நிலங்களில் இருந்து மீத்தேன் (Methane) மற்றும் ஷேல் கேஸ் எடுக்க முயற்சித்து வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த செய்தி அருகில் இருக்கும் பகுதிகளுக்கும்  பரவியதால் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு ஒன்று திரண்டனர்.அங்குள்ள அய்யனார் கோயில் அருகே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அதிகாரிகள் வந்து பேசுச்சுவார்தை நடத்தியும் களைந்து செல்ல மக்கள் மறுத்ததால்  அப்பகுதியில் பரபரப்பு அதிகரித்தது.பின்னர் அங்கு வந்த திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களுடன் இணைந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...