தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

20-05-2017 க்கு பிறகு வரும் வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

20-05-2017 நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.19-05-2017 இன்று பதிவாகிய வெப்பநிலையை விட 1° முதல் 2° செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.அதே சமயம் இன்னும் 2 நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகளில் 2° முதல் 3° செல்சியிஸ் வரையிலும் தமிழக உள் மாவட்டங்களில் 3° முதல் 5° செல்ஸியஸ் வரை வெப்பம் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது .இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மாறாக நாளைக்கு பிறகு அதாவது 21-05-2017 முதல் இதே வெப்பநிலையில்  சிறிதளவு மாற்றங்களுடன் வருகின்ற வாரத்தில் தொடரவோ அல்லது 1° முதல் 2° செல்ஸியஸ் வரை குறையவோ வாய்ப்புள்ளது.

அதே சமயம் தமிழக உள் மாவட்டங்களில் நாளைக்கு பிறகு அதாவது 21-05-2017 முதல் வரும் வாரத்தில் வெப்பம் 1° முதல் 3° செல்ஸியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வெப்ப உயர்வு என்றவுடன் யாரும் பயப்பட வேண்டாம்.வட கடலோர மாவட்டங்களில் இப்பொழுது நிலவும் வெப்பநிலையே மிகுதியான அளவு தான் இதனுடன் 1° முதல் 2° செல்சியஸ் கூடுதலாக உயர போகிறது அவ்வளவு தான்.இனி வரக்கூடிய நாட்களில் முடிந்த வரையில் காலை 11:00 மணியிலிருந்து மாலை 4:00 மணிவரை வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்வது நல்லது.குளிர்ச்சியான பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.எலுமிச்சை சாறு அருந்துவது மிகவும் நல்லது.மற்றபடி பயப்படும் அளவுக்கு ஒன்றும் கிடையாது.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...