தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2018 முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் தோதுத்தேர்வு நடத்தப்படும் -கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 (பன்னிரண்டாம் வகுப்பு) பொது தேர்வுகள் போல பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கும் பொது தேர்வு நடத்தப்படும் என தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.மேலும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் விரைவில் மாற்றி அமைக்கப்படும் எனவும் அவர் தெரித்துள்ளார்.

இப்பொழுது பல பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பாடங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வது  கிடையாது.சில தனியார் பள்ளிகள் 12ஆம் வகுப்பு பொதுதேர்க்வுக்கான பயிற்சிகளையே தங்களது மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளும் அளித்து வருகின்றன.எப்படி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது என்கிற வகையிலே தான் மாணவர்கள் தொடர்ந்து பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள் .12ஆம் வகுப்பு படங்களுக்கான அடிப்படை விஷயங்கள் அனைத்தும் 11 ஆம் வகுப்பு பாடத்தில் இடம்பெற்றிருக்கும்.11ஆம் வகுப்பில் என்னென்ன பாடங்கள் இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் மாணவர்களுக்கு நேரடியாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதனால் மாணவர்கள் வெறும் தேர்வு எழுதும் இயந்திரங்களாக மாற்றப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.இந்த விவகாரத்தில் பள்ளிகளை மற்றும் தனியாக குற்றம் சொல்லி விட முடியாது மாணவர்களின் பெற்றோர்களும் மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் வழங்குவதை தவிர்த்து அவர்களின் அறிவுத்திறன் பெறுக வழி செய்ய வேண்டும்.இப்பொழுது நாம் இன்பற்றுய் வரும் கல்வி முறையில் பொது தேர்வின் பொழுது கூட ஒரு மாணவன் என்ன புரிந்து கொண்டான் என்று பரிசோதனை செய்யும் அளவு அவன் சுயாமாக சிந்தித்து எழுதும் அளவுக்கான கேள்விகள் கேட்கப்படுவது கிடையாது.பாட புத்தகங்களில் இருக்கும் கேள்விகளே நேரடியாக கேட்கப்படுகின்றன.அந்த பொதுத்தேர்வு முடிவுகள் யாருக்கு அதிக நினைவாற்றல் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.இதை எப்படி ஒரு சிறந்த கல்வித்திட்டம் அல்லது கல்விமுறை என்று கூற முடியும்.பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டும் எதுவும் மாறப்போவது கிடையாது நமது கல்வி முறையிலும் ,கற்பிக்கு முறையுலுமே மாற்றம் கொண்டு வர வேண்டும்.





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...